ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று வயது மகனின் கால்களை பிடித்து தரையில் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அங்குள்ள வாட்டர் ஹவுஸ் காலனியில் வசிக்கும் முனிராஜா - சுவாதி தம்பதியினரின் மூன்று வயது மகன் (நிகில்) அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மீண்டும் அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சுவாதி வற்புறுத்தினார்.
இதனால் வெறுப்படைந்த முனிராஜா தனது மகனின் கால்களை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்