நீலகிரி அருகே சாலையை கடக்க முயன்ற கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குந்தா அருகே உள்ளது மஞ்சூர் கிராமம்.
இப்பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் மான், கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகள், அடிக்கடி மஞ்சூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், அப்பகுதில் உள்ள தாய்சோலை அருகே, கரடி ஒன்று சாலையை கடந்து செல்வதை, சுற்றுலா பயணி ஒருவர் காரில் சென்றபடி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர், இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது படம்பிடிப்பதையும், செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் கமெண்ட் செய்துவருகின்றனர்.