திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காணாமல் போன ஒன்றரை வயது பெண் குழந்தை வீட்டிற்கு அருகில் உள்ள தரை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது.
கணவரை பிரிந்து வாழும் துர்கா என்ற பெண் தனது பெண் குழந்தையுடன் சிலுக்குவார்பட்டியில் உள்ள மாமா பாலு வேலை செய்யும் தோட்டத்து குடியிருப்பில் தங்கி இருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை குழந்தை ரத்திகா மாயமான நிலையில் சனிக்கிழமை காலை வீட்டிற்கு அருகில் இருந்த தரை கிணற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பு சுவரில்லாத தரை கிணற்றில் குழந்தை தவறி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.