திருப்பத்தூர் பாஜக நகர செயலாளர் கலிகண்ணன் கொலை வழக்கில் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 சென்ட் இடம் தொடர்பாக கலிகண்ணனுக்கும், அவரது உறவினரான திருப்பத்தூர் திமுக இளைஞரணி அமைப்பாளர் ஹரிவிக்னேஷ்க்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.
ஹரிவிக்னேஷ் தூண்டுதலின் பேரில் கலிகண்ணனை கடத்திய கூலிப்படையினர், ஊத்தங்கரை அடுத்த வெப்பாளப்பட்டியில் இறக்கிவிட்டுள்ளனர். அங்கு வைத்து கலிகண்ணனை, ஹரிவிக்னேஷ் , மணிகண்டன் மற்றும் கூலிப்படை தலைவன் அருண்குமார் ஆகியோர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.