ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதலால் கீவ்-வில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருளில் பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் மருத்துவர்கள் ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கீவ்-வில் உள்ள மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்துக் கொண்டிருந்த போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், சாமர்த்தியமாக பேட்டரி வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரஷ்ய படைகள் அணு மின் நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால், உக்ரைனில் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.