மதுரையில் கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்குவதற்காக பெண் விஏஓ லஞ்சம் வாங்கும் வீடியோ மற்றும் நான் மட்டுமா லஞ்சம் வாங்குகிறேன் என்று பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பஞ்சவர்ணத்திற்கு கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்காமல் மேலமடை கிராம நிர்வாக அலுவலர் ரமணி அலைக்கழித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, தன்னார்வலர் மூலமாக விஏஓவை அணுகிய போது அவர் லஞ்சம் கேட்டதால், 250 ரூபாயை லஞ்சமாக வழங்கும் போது விஏஓ பெற்றுக் கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், வீடியோ எடுத்த தன்னார்வலரிடம் செல்போனில் பேசும் விஏஓ, தலையாரியே 3 மாடி கொண்ட வீடு கட்டி விட்டார் என்று பேசும் ஆடியோவும் வெளியாகி உள்ளது.