குஜராத் மாநிலம் வடோதராவில் பாஜக சார்பில் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரச்சாரக் களத்தில் மும்பையில் இருந்து அழைத்து வரப்பட்ட திரைப்பட நடனக் கலைஞர்களை பாஜக இறக்கியிருப்பதால் தேர்தல் கூட்டங்கள் களை கட்டியுள்ளன. பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க இந்த நடனக்குழுவினர் வீதிவீதியா நடனமாடிச் செல்கின்றனர்.
அரசியல்வாதிகளின் காரசாரமான பேச்சுகளுக்கு மத்தியில் இத்தகைய பொழுதுபோக்கு கலையுடன் பிரச்சாரம் செய்வது பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது