போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக பிரபல திரைப்பட நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலிசார் அபராதம் விதித்து உள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் கடந்த 20 ஆம் தேதி அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளின் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நீலங்கரை இல்லத்தில் இருந்து தனக்கு சொந்தமான கருப்பு நிற இன்னோவா காரில் சென்றிருந்தார்.
அந்த காரின் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது பற்றி பொதுமக்களில் ஒருவர் போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் புகார் அளித்து இருந்தார். இதனை அடுத்து நடிகர் விஜய்க்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாக போக்குவரத்து போலிசார் தெரிவித்து உள்ளனர்.