53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி 9 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன. ராஜ்மவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்.திரைப்படமும் இதில் கலந்து கொள்கிறது.