செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

டக்.. டக்.. யாரது ? அர்னவ் யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை..? போலீசவச்சி காமெடி பண்ணலையே.!

Oct 07, 2022 06:54:44 PM

காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் கொடுத்து சென்றபின், நடிகை திவ்யா வீட்டின்  கதவை நள்ளிரவில் அச்சுறுத்தும் விதமாக பலமாக தட்டிய சீரியல் ஹீரோவால் போலீசார் தூக்கத்தை தொலைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது 

சின்னத்திரை நடிகர்களான அர்ணவ் - திவ்யா காதல் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பில் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், போரூர் அனைத்து மகளிர் போலீசார் கூட்டத்தினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை திவ்யா சிகிச்சைக்கு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து காவல் ஆணையர் அலுவலகம் வந்து, நடிகர் அர்ணவ் மீது புகார் அளித்த பின்னர் திருவேற்காடு வட நூம்பல் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
அதே வீட்டில் தனி அறையில் அர்ணவ் வசித்து வந்தார்.

போலீசில் புகார் அளித்த பின்னர் கூட இருவரும் ஒரே வீட்டில் தனி தனி அறைகளில் தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு திவ்யா தான் தங்கி இருந்த அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு வேலையில் இருட்டுக்குள் சென்ற அர்ணவ் , திவ்யாவின் அறை கதவை பலமாக தட்டி உள்ளார், கதவு திறக்கப்படாத ஆத்திரத்தில் அர்னவ் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் திடுக்கிட்டு விழித்த திவ்யா, பயந்து போய் உடனடியாக காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு
அர்ணவ் என்னுடைய அறையை பலமாக தட்டுகிறார் , தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, திருவேற்காடு காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலையடுத்து, இரவு நேர ரோந்து போலீசார், திவ்யாவின் வீட்டிற்கு விரைந்தனர்.

தன்னை தேடி போலீசார் வந்திருப்பதை அறிந்ததும், அர்ணவ் , காலையில் நான் ஜிம்முக்கு போகனும், அதற்கான உடையும், பேஸ்ட் பிரஷ் போன்றவற்றை எடுக்கவே, கதவை தட்டியதாக கூறிசமாளித்தார்.

விடிந்த பின்னர் இவற்றை கேட்டு வாங்கி இருக்கலாமே ? உங்க ரெண்டு பேருக்கும் தகராறு இருக்கும் நிலையில், நள்ளிரவில் இருட்டுக்குள்ள என்னப்பா வேலை ? என்று சத்தம் போட்ட போலீசார், தீவ்யாவின் அறையில் இருந்த அர்னாவ்வின் உடமைகளை எடுத்து கொடுத்ததோடு, இது போன்று வீண் வம்புகள் எல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்துச் சென்றனர்.

அதே நேரத்தில் போலீசுக்கு ஆயிரம் மக்கள் பணிகள் உள்ளது. ஒரே வீட்டில் இருந்து கொண்டு இப்படி மாறி மாறி போலீசில் புகார் அளித்தால் மற்ற வேலைகளை நாங்கள் எப்படி கவனிப்பது ? என்று ஆதங்கப்பட்ட போலீசார் தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து சென்றதாக கூறப்படுகின்றது.


Advertisement
கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி
தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement