குஜராத்தில், நவராத்திரி விழாவின் கர்பா நிகழ்ச்சியின் போது, கல்வீசி இடையூறு செய்த நபர்களை மக்கள் முன்னிலையில் போலீசார் லத்தியால் தாக்கினர். அகமதாபாத்தில் உள்ள Kheda பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, கல்வீசி சிலர் தாக்கியுள்ளனர்.
இதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்த நிலையில், போலீசாரின் வாகனம் உள்பட பல வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், 9 பேரை மக்கள் முன்னிலையில் வரிசையாக அழைத்து லத்தியால் தாக்கினர்.
போலீசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.