திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் +2 மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு அளித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஜெயராமன் +2 மாணவியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரின் பெற்றோரை வற்புறுத்திய நிலையில், படிப்பு முடிந்த பின் இது குறித்து பேசிக்கொள்ளலாம் என மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயராமன், கடந்த 2014-ம் ஆண்டில் மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.