பொம்மை கார் மோதிய விபத்தால் நாய் ஒன்று உயிரிழப்பது போல் நடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்கார் விருது அந்நாய்க்கு கொடுக்கலாம் என்ற வாசகத்துடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாலையில் அந்நாய் நடந்து வருவது போலவும், எதிரே வந்த கார் அதன் மீது மோதுவது போலவும் காட்டப்பட்டுள்ள அந்த வீடியோவில் சற்று நொண்டியபடி வந்து கீழே விழுந்து உயிரிழந்து விடுவது போல் அச்சு அசலாக நடித்துள்ளது .