செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

விமானப்படையில் இலகுரக ஹெலிகாப்டர்கள்.. இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தும் வல்லமை..!

Oct 03, 2022 05:58:58 PM

விமானப்படையின் திறனை மேலும் வலுவூட்டும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்பணித்தார்.

இந்திய விமானப்படைக்கு 10, ராணுவத்திற்கு 5 என மொத்தம் 15 இலகுரக ஹெலிகாப்டர்களை 3887 கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி இதன் முதல் தொகுப்பு இன்று விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இலகு ரக ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விமானப்டை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌத்திரி மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர். பிரச்சாந்த் என்று இந்த ஹெலிகாப்டர்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப்பகுதிகளுக்கு அதி நவீன ஆயுதங்களுடன் துரிதமாக சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை படைத்தது இந்த ஹெலிகாப்டர்கள் என்று கூறினார்.

இதன் பின்னர் அமைச்சர் ராஜ்சிங், இலகுரக ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டார்

நவீன ரக துருவ் ரக ஹெலிகாப்டர்கள் போன்று கவச பாதுகாப்பு கொண்ட இந்த இலகுரக ஹெலிகாப்டர்களை அனைத்து காலநிலைகளிலும் இயக்க முடியும். இரவு நேரத்திலும் இதனால் எதிரிகளின் நிலை மீது துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். ட்ரோன்களையும் தாக்கி அழிக்கும் திறன் படைத்த இந்த ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நன்றாக பயன்படுத்த முடியும்.b

 

 


Advertisement
மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து - 2 பேர் பலி..!
மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்.. 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம்..!
சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து
ஆந்திராவில் ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய மாணவி சிகிச்சைப் பலனின்றி பலி..!
ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கிய 8 வயது சிறுவன்.. 3 வது நாளாக விடிய விடிய மீட்புப் பணிகள் தீவிரம்..!
ஆஸ்திரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி பிக்ரம்ஜித் சிங்கை கைது செய்த NIA அதிகாரிகள்..!
PFI தொடர்புடைய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
குஜராத்தில் கிடைத்துள்ள மகத்தான வெற்றி உற்சாகம் அளிக்கிறது - பிரதமர் மோடி.!
உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் 2.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி..! பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement