அமெரிக்க கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட முதல் உலகப் போர் காலத்து ஜெர்மன் யு-போட் நீர் மூழ்கிக் கப்பல் சிதைவுகள் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
U-111 ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல், கடந்த 1922ம் ஆண்டு அமெரிக்க கடற்படையினரால் வர்ஜீனியா கடற்கரையில் ஆயிரத்து 600 அடி ஆழத்தில் மூழ்கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெட்கோவிக் என்ற ஆராய்ச்சியாளர், வர்ஜீனியா கடற்கரையில் 400 அடி ஆழத்தில் அந்த கப்பல் சிதைவை கண்டுபிடித்துள்ளார்.
இது தவிர முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்க கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.