ஈரானில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்காவில் வசிக்கும் ஈரானியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
22 வயதான மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்துள்ளன.
லண்டன், ரோம், மாட்ரிட் மற்றும் பிற மேற்கத்திய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகை முன்பு திரண்ட ஈரானியர்கள், ஈரான் கொடிகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.