ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாகிலுள்ள பஹ்மர் அருகே பேருந்து கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் ராஞ்சியில் யாத்ரீகர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, கயாவிலிருந்து ஹசாரிபாக் வழியாக ஒடிசாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்கள் ஹசாரிபாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனையில் கூறப்பட்டுள்ளது.