திருச்சியில் போதை ஊசி போட்டுக்கொண்ட வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலசிந்தாமணியை சேர்ந்த ஜாவித் மற்றும் இவரது நண்பர்கள் நான்கு பேர் போதை மாத்திரையை டிஸ்டில்டு வாட்டரில் கலந்து வடிகட்டி ஊசி மூலம் உடலில் செலுத்திய நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு ஜாவித் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் வலி நிவாரணி மாத்திரை ரூபாய் 300 வீதம் ஐந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாத்திரையை விற்பனை செய்த தெண்ணூர் அண்ணாநகரை சேர்ந்த ராம்நாத் மற்றும் ஜாவித்தின் நண்பர் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.