தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொத்துத் தகராறில் தந்தை - மகன் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக வீடியோவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீரான்குளத்தைச் சேர்ந்த தானியேல் என்பவருக்கு 5 மகன்கள் உள்ளனர். தானியேலுக்கும், மகன் செல்வபிரபுவுக்கும் இடையே சொத்துச் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பிரச்சனைக்குரிய நிலத்தில் உழவு மேற்கொண்டது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், இருவரும் கட்டிப்புரண்டு தாக்கிக்கொண்டனர்.
அவர்களை விலக்க முயன்றபோது, மற்ற மகன்களும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய தானியேல் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.