திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மூன்று நாட்களுக்கு முன், பெண் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.
கடந்த 28ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த தனது மகன் ராகவன், காணாமல் போனதாக முருகன் என்பவர் போலீசில் புகாரளித்தார்.
அதன் பேரில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது 35 வயது மதிக்கத்தக்க பெண் சிறுவனை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில், சமயபுரம் பேருந்து நிலையம் அருகே தனியாக நின்று அழுது கொண்டிருந்த சிறுவனை மீட்டனர். போலீசார், அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.