அமைச்சர் மூர்த்தியின் மகனுக்கு நடைப்பெற்ற ஆடம்பர திருமணத்தை போல் மதுரை வரலாற்றில் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியின் வீட்டிலும் நடைபெற்றதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் மூர்த்தியின் ஆடம்பர இல்ல திருமணம், நாடுமுழுவதும் விமர்சனம் செய்யப்பட்டு வருவதாகவும், உலை வாயை மூடலாம் ஊரின் வாயை மூட முடியாது என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஆர்.பி.உதயகுமார் அப்போது குறிப்பிட்டார்.