செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நினைவெல்லாம் நித்யா.. கந்து வட்டி காதலுக்கு கணவன் கொடுத்த பரிசு..!

Sep 26, 2022 07:16:55 AM

தேனி மாவட்டம் கம்பத்தில், வட்டிக்கு பணம் கொடுத்து, பெண்ணை காதலிக்க கட்டாயப்படுத்திய நிதிநிறுவன ஊழியரை வீட்டுக்கு வரவைத்து மனைவியுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்து, சடலத்தை முல்லை பெரியாற்றில் வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்கு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். 37 வயதான இவர், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 21-ந்தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில், அவருடைய மனைவி கனிமொழி, தனது கணவரை காணவில்லை என புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து பிரகாசை தேடி வந்த போலீசார் அவரது வீட்டு அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் மற்றும் அவரது மனைவி நித்யா என்பவரிடம் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நித்யாவை பிடித்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வட்டிக்கு பணம் பெற்று தவணை செலுத்த தவறியதால், வட்டிப்பணத்துக்காக நித்யாவை மிரட்டி அவரது கட்டுப்பாட்டில் பிரகாஷ் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

நாளடைவில் அது ரகசிய காதலாகி உள்ளது. அவரது கணவரான ஆட்டோ ஓட்டுனர் வினோத்குமாருடன், மது அருந்தும் பிரகாஷ், அவர் போதையில் மயங்கியதும், நித்யாவின் வீட்டுக்கு சென்று தனிமையை கழித்து வந்துள்ளார்.

இது அவரது கணவருக்கு அரசல் புரசலாக தெரியவந்ததும். மனைவியிடம் இது குறித்து கேட்டு அடித்து உதைத்துள்ளார். அப்போது வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த இயலாததால் நிதி நிறுவன ஊழியரின் பிடியில் சிக்கி தவிப்பதாக நித்யா கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து பிரகாசை வீட்டிற்கு வரவைத்து தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளது.வினோத்குமார், நித்யா தம்பதி..!

சம்பவத்தன்று இரவு வினோத்குமார் வீட்டில் வைத்து பிரகாஷை மது குடிக்க அழைத்துள்ளார். இருவரும் குடிக்கும் போது குடிப்பது போல நடித்த வினோத்குமார் போதையில் மயங்கி விழுந்து தூங்குவது போல நடித்துள்ளார். இதையடுத்து நித்யாவின் அறைக்கு சென்றுள்ளார்.

ஆனால் பிரகாஷுக்கு தெரியாமல் வினோத்குமார் பின் தொடர்ந்து சென்றுள்ளார்

நித்யாவுடன் தனிமையில் இருக்க ஆயத்தமான போது பின்பக்கம் இருந்து பிரகாஷ் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி உள்ளார் வினோத்குமார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கி பிரகாஷை கொலை செய்துள்ளனர்.

நள்ளிரவில் கூட்டாளி ரமேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து பிரகாஷின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றி சென்ற தம்பதியர் , உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையோரம் உள்ள முல்லை பெரியாற்றில் தூக்கி வீசி உள்ளனர்.

பின்னர் தங்கள் ஆட்டோவில் வீடுதிரும்பி ஒன்றும் தெரியாதது போல இருந்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலைகார தம்பதியரான வினோத்குமார் , நித்யாவையும் சடலத்தை ஆட்டோவில் தூக்கி வைக்க உதவிய கூட்டாளி ரமேஷையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

தற்போது முல்லைப்பெரியாற்றில் பிரகாசின் உடலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கந்துவட்டிக்கு காதலை பரிசாக கேட்டவரை தம்பதியர் கூட்டு சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி
தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement