செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அங்கன்வாடி ஆயாக்கள் 5 பேருக்கு வளைகாப்பு ..! இதிலும் முறைகேடா முடியலப்பா..!

Sep 26, 2022 07:17:26 AM

சாத்தான்குளத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போதிய கர்ப்பிணிகள் வராததால் கர்ப்பமாகாத அங்கன்வாடி ஊழியர்களுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்ட கூத்து அரங்கேறி உள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள கொளுந்தட்டு அங்கன்வாடி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட மேற்பார்வையாளர் ஜெயா என்பவர் தலைமையில் நடந்தது.

இதில் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட 40 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு, வளையல்கள், மாலை, பூ, மஞ்சள், குங்குமம் என அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு போதிய கர்ப்பிணிகள் வராததால், அங்கன்வாடி ஊழியர்களாக பணியாற்றிய 5 பெண்களை கூட்டத்திற்குள் அமர வைத்து வளைகாப்பு நடத்தி உள்ளனர். அந்த 5 பேரும் தற்போது கர்ப்பமாக இல்லை என்ற போதும் இந்த கூத்தை அங்கிருந்த ஊழியர்கள் அரங்கேற்றி உள்ளனர்.

இந்த 5 பேருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். 40 வயதை கடந்த சில பெண்களின் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறனர். இவர்களுக்கு வளைகாப்பு நடந்த சம்பவம் கணவன்மார்களுக்கே தெரியாது என்பது தான் கூடுதல் டுவிஸ்ட்.

கர்ப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். இதனை மீறி கூடுதல் நிதி கிடைக்கும் என்ற ஆசையில் இந்த வேலையை பார்த்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வட்டாரத்திற்கு அரசு சார்பில் உணவு வகைகக்காவும், வளையல்கள், மாலைகளுக்காகவும் 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

மேலும் தனியார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தால் அதற்கு தனியாக பில் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்பதால் கூட்டத்தை அதிகமாக காண்பிப்பதற்காக கர்ப்பிணி அல்லாத பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.


Advertisement
கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்
மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்
குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!
லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி
அரசு பேருந்தை உடைக்க கத்தி எடுத்த மைனருக்கு கையில் மாவுக் கட்டு..! தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தாராம்
கிட்னாப்பில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் சிங்கப்பூர் தப்பி ஓட்டம்..! ஒன்றும் தெரியாது என வீடியோ
யோகிபாபு படவெளியீடு தயாரிப்பாளரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை..! வெட்டுக்காயங்களுடன் மீட்ட போலீஸ்
ரவுசு காட்டு ரவுண்டு கட்டு… வழக்கு வாங்கு..! பைக் புள்ளீங்கோஸ் அடாவடி
தீராத செல்போன் பேச்சு தாலியால் கழுத்தை இறுக்கி காதல் மனைவி கொலை…! கை குழந்தையுடன் ஓடிய இளைஞர்

Advertisement
Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கல்லானாலும் கணவன் புயலானாலும் புருஷன்... கண்ணீருடன் தேடிய மனைவி..! இருவரையும் மீட்ட போலீஸ்

Posted Dec 10, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரை கடந்தது...

Posted Dec 09, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்... காதலர்களே உஷார்..! இருவர் பலியான சோகம்

Posted Dec 08, 2022 in இந்தியா,அரசியல்,வீடியோ,செய்திகள்,Big Stories,

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்.!

Posted Dec 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லேடி குரலில் பேசி ரூ 21 லட்சங்களை கறந்த அக்மார்க் கேடி..! ஐஸ்வர்யா இல்ல ஆசாமி


Advertisement