வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் 'எடிட்' செய்யும் வகையில் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த செயலி வாயிலாக பயனர்கள் அவசரமாக செய்திகளை அனுப்பும்போது ஏற்படும் பிழைகளை திருத்தும் வகையில் இந்த அம்சம் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
குறுஞ்செய்திகள் அனுப்பிய சிறிய நேரத்திற்குள் அதனை 'எடிட்' செய்யும் வகையில் அந்த வசதி கொண்டுவரப்பட உள்ளதாகவும், அவ்வாறு 'எடிட்' செய்யப்படும் செய்திகள், 'எடிட்டட்' என குறிப்பிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.