செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

''14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்'' பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

Sep 06, 2022 02:51:01 PM

பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தையொட்டி நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 45 ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை இன்று காலை வழங்கி கவுரவித்தார். நல்லாசிரியர் விருதுகளை பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மாலையில் கலந்துரையாடினார்.

ஆசிரியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், புதிய கல்விக் கொள்கை 1986 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையை மாற்றி அமைத்துள்ளதாகவும், பள்ளி மற்றும் உயர்கல்வி முறைகளில் மாற்றியமைக்கும் சீர்திருத்தங்களுக்கு வழி வகுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

'பி.எம்.- ஸ்ரீ' எனப்படும் பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அப்பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையின் படி மாதிரிப் பள்ளிகளாக செயல்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், 'பி.எம்.- ஸ்ரீ' திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள், நவீன மற்றும் கண்டுபிடிப்பு சார்ந்த கற்றலை மையமாகக் கொண்டிருக்கும் என்றும், அப்பள்ளிகளில் புதிய தொழில்நுட்பம், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் பல நவீன உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய கல்விக் கொள்கை சமீப ஆண்டுகளில் கல்வித் துறையை மாற்றியுள்ளதாகவும், 'பி.எம். - ஸ்ரீ' பள்ளிகள் , நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மேலும் பயனளிக்கும் என உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும், சுமார் 250 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தவர்களை நாம் பின்னுக்குத் தள்ளியிருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 


Advertisement
வைத்தியம் செய்ய விருப்பம் இல்லாமல் பெற்ற மகனை காலை பிடித்து தூக்கி தரையில் அடித்து கொன்ற தந்தை..!
குஜராத்தில் 900 ஆண்டு பாரம்பரியத்துடன் கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பு..
இளைஞர்களிடம் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் - பிரதமர்
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
டிசம்பர் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்..!
திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை சந்தித்த கண்காணிப்பாளர்.. இருவரும் உரையாடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!
இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க டெல்லி வருகிறார் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர்
மங்களூருவில் இளம் பெண்ணுடன் பேருந்தில் ஒன்றாக சென்றதால், அடி-உதை.. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தாக்குதல் என புகார்..!
ஆபாசப் படத்தை காட்டி ஏழைப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்.. ஆண் நண்பருடன் சேர்த்து அதிரடியாக கைது செய்த போலீசார்..!

Advertisement
Posted Nov 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

அவன் இருக்கும் போது அவரும் வந்துட்டாரு..! தேவியின் காதல் திருவிளையாடல்..! கட்டுமான அதிபர் கொலை பின்னணி

Posted Nov 26, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

தீவிரவாதத்தின் கோரமுகம் மும்பை தாக்குதல்.. 14 ஆண்டுகள் கடந்தும் கரையாத வடுக்கள்..!

Posted Nov 25, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வண்டி சேலத்தில்... திருச்சி போலீசார் ரூ.1000 அபராதம்..! ஆன்லைன் வசூல் அட்ராசிட்டிஸ்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

வீசப்பட்ட ஒத்த செருப்பை வாயில் கவ்விக்கொண்டு தப்பி ஓடிய பாம்பு..! பரபரப்பு காட்சிகள்

Posted Nov 25, 2022 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருமணத்துக்கு சீர்வரிசை தூக்கிச்சென்ற பெண் சுருண்டு விழுந்து பலி..! கொரோனாவுக்கு பிந்தய அதிர்ச்சி


Advertisement