செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

10 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

Aug 19, 2022 04:54:36 PM

நாட்டில் இன்று 10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் சுத்தமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் விநியோகம் என்ற மத்திய அரசின் பிரச்சாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற மத்திய அரசின் ஹர் கர் ஜல் உத்சவ் என்ற ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் விநியோகம் இயக்கத்தின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி காணொளி மூலம் பங்கேற்றுப் பேசினார்.

கோவாவில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வசதி ஏற்படுத்தி இருப்பதன் மூலம் இன்று ஒரு மைல்கல்லை அம்மாநிலம் எட்டியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக ஒவ்வொருவரையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சகோதரிகளை வாழ்த்த விரும்புவதாக மோடி கூறினார்.

தாத்ரா நகர் ஹவேலி, டையு மற்றும் டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களும் இதே சாதனையை எட்டியிருப்பதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார். 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ், வெறும் 3 ஆண்டுகளில், 7 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இது சாதாரண சாதனையல்ல என்றும் சுதந்திரம் பெற்ற பின் 7 தசாப்தங்களில், நாட்டிலுள்ள 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் வசதி இருந்தது என்று மோடி சுட்டிக்காட்டினார். ஒரு அரசாங்கத்தை அமைக்க அவ்வளவு முயற்சி தேவையில்லை, ஆனால் ஒரு நாட்டை கட்டமைப்பதற்கு, கடின உழைப்பு அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார்.

அதனால் தேசத்தை கட்டமைக்கும் பாதையை பாஜக அரசு தேர்ந்தெடுத்ததாக மோடி குறிப்பிட்டார். நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய இரண்டின் சவால்களையும் எதிர்கொள்வதற்கும் தீர்ப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

நாட்டைப் பற்றி கவலைப்படாத மக்கள் நாட்டின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் சாடினார்.

 


Advertisement
மும்பை உள்ளூர் ரயிலில் இரு பெண்களிடையே கைகலப்பு... தடுக்கச் சென்ற பெண் போலீசார் தலையில் காயம்
பம்பரம், கோலி விளையாடி மகிழ்ந்த சத்தீஷ்கர் மாநில முதல்வர்!
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு...
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு..!
90ஆவது விமானப்படை தினம் - போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை..!
ஆகாசா ஏர் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் 50சதவீதம் நிறைவு... யோகி ஆதித்யநாத் தகவல்
22 மொழிகளில் நில ஆவணங்களை மொழிபெயர்க்க மத்திய அரசு திட்டம்
எங்க தொகுதி எம்.பி.யை காணோம்: போஸ்டர் அடித்து சன்னிதியோல் ஆதரவாளர்கள் அதிருப்தி
"என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எழுதவில்லை".. டெல்லி துணை நிலை ஆளுநர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்

Advertisement
Posted Oct 07, 2022 in செய்திகள்,Big Stories,

டக்.. டக்.. யாரது ? அர்னவ் யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை..? போலீசவச்சி காமெடி பண்ணலையே.!

Posted Oct 07, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இளைஞர் உயிரைப்பறித்த சிக்கன் பிரியாணி... கர்ப்பிணிக்கு விருந்து நிகழ்வில் சோகம்

Posted Oct 07, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

இப்படில்லாமா செய்வ... செல்லம்மா ஹீரோவின் வில்லத்தனம் ஆடியோவால் அம்பலம்.! திருமணத்தை மறைக்க பேரம்

Posted Oct 06, 2022 in தமிழ்நாடு,Big Stories,

3 சிறுவர்களின் உயிரை பறித்த கெட்டுப்போன ரசம் சாதம்

Posted Oct 06, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

காதலித்து மதம் மாற்றி சீரியல் நடிகையை கர்ப்பிணியாக்கிய நாயகன்..! அரசு மருத்துவமனையில் சிகிச்சை


Advertisement