3 நாட்கள் பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
வரும் 23ம் தேதி சென்னையில் இருந்து கோவை செல்லும் முதலமைச்சர், 24ம் தேதி கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
25ம் தேதி திருப்பூர் செல்லும் முதலமைச்சர் சிறு குறு தொழில் நிறுவனங்களில் சார்பில் நடைபெறும் தொழிலுக்கு தோள் கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார்.
பின்னர், 26 ஆம் தேதி ஈரோடு சென்ற பிறகு அன்று மாலை சென்னை திரும்புகிறார்.