செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Aug 16, 2022 04:13:52 PM

விருமன் படத்திற்கு ரசிகர்களை கூட்டமாக வரவைப்பதற்காக தூத்துக்குடியில் உள்ள கார்த்தி ரசிகர்கள் குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் சின்னத்தம்பி கால டெக்னிக்கை கையாண்டு வருகின்றனர். 

சின்னதம்பி படம் வெளிவந்த 90 களின் தொடக்க கால கட்டத்தில் ரசிகர்களை கவர்வதற்காக திரையரங்குகளில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டு வந்தது. அதனை நினைவூட்டும் விதமாக ரஜினி நடிப்பில் வெளியான மன்னன் படத்தில் வைக்கப்பட்ட காமெடி காட்சி பிரபலமானது.

அன்று படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியாக தயாரிப்பாளர்களே ரசிகர்கள் மூலமாக ஒவ்வொரு திரையரங்குகளுக்கும் பெண்களை கவரும் பரிசுகளை அள்ளிக்கொடுத்தனர். தற்போது ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில் திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட சில முன்னனி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர் கூட்டம் வருகின்றது.

மற்ற படி நல்ல படமாக இருந்தால் மட்டுமே 4 நாட்கள் திரையரங்கில் ரசிகர்கள் கூட்டத்தை காண முடிகின்றது. இந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள கார்த்தியின் விருமன் படத்துக்கு கூட்டத்தை சேர்க்கவும், பரிசு குறித்து அறிந்திராமல் படம் பார்க்க வந்தவர்களுக்கு சர்ப்பரைஸ் அளிக்கும் வகையிலும் தூத்துக்குடி மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.

ரசிகர்களின் இருக்கை எண்களை கொண்டு இந்த குலுக்கல் நடத்தப்பட்டு படத்தின் இடைவேளையின் போது அதிர்ஷ்டசாலி ரசிகர்களை தேர்தெடுத்து 1500 ரூபாய் மதிப்புள்ள ஹெட்போன் வழங்கினர். பலருக்கு அவர்களது இருக்கையை தேடிச்சென்று பரிசு வழங்கப்பட்டது

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு காட்சிக்கு மட்டுமே குலுக்கல் முறையில் இந்த பரிசு வழங்கப்பட்ட நிலையில், கார்த்தி படத்துக்கு போனா பரிசு கிடைக்கும் என்று நம்பி திங்கட்கிழமை படம் பார்க்க சென்ற நிறைய பேர் ஏமாற்றத்துடன் வீட்டுக்குச்சென்றனர்.

இன்றைய குலுக்கல் எப்போது என்று ஆவலுடன் காத்திருந்த நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை விருமன் படம் ஓடினால் குலுக்கல் பரிசு உண்டு எனக்கூறி அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னனி நடிகர்களில் ஒருவராக சொல்லப்படும், கார்த்தியின் படங்களுக்கே பரிசு கொடுத்தால் தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்ற நிலை உருவாகி இருப்பது குறிப்பிடதக்கது.

 

 


Advertisement
மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!
தன்னைவிட மூத்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்.. பெற்றோரை பீர் பாட்டிலால் தாக்கிய மகன்..!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் கைது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணி விடுவிப்பு
"1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம்".. இபிஎஸ்-ன் அறிக்கைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு..!
பிளஸ் 2 மாணவியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை உறுதி..!
கட்டுமான தொழிலாளர்களை தாக்கி வழிப்பறி செய்த இளைஞர்கள்..
ராட்சத ராட்டிணத்தில் அந்தரத்தில் தொங்கிய படி சாகசம் செய்த இளைஞர்களை எச்சரித்த போலீசார்..
10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!
விஜயதசமி கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement