சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் மாதவன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளனர்.
மாதவன் நேற்று சரவணனிடம் துணியை ஒழுங்காக தைக்குமாறு கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன் ஊசியை எடுத்து மாதவனை குத்தியதால், பதிலுக்கு மாதவன் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணின் இடது மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.