செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பாலியல் அத்துமீறல், மிர்ச்சி பாபாவும், பாதிரியாரும் கைது..! அடங்கவே மாட்டானுங்களா ?

Aug 10, 2022 07:58:54 AM

குழந்தை வரம் கேட்டுச்சென்ற பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக அரசியல் சாமியார் மிர்ச்சி பாபாவை போலீசார் கைது செய்தனர். சர்ச்சுக்கு வந்த சிறுமிகளிடம் எல்லை மீறிய பாதிரியார் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் பிரபல அரசியல் சாமியார் வைராக்கியானந்த் கிரி என்கிற மிர்ச்சி பாபா..! 2019 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அரசியல் சாமியாராக பிரபலமடைந்தார்.

சம்பவத்தன்று சாமியார் வைராக்கியானந்த் கிரியிடம் ஒரு பெண் தனக்கு குழந்தை இல்லை என்று கூறி பரிகாரம் கேட்டு சென்றுள்ளார். அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த நீரை தீர்த்தமாக கொடுத்த மிர்ச்சி பாபா, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் அந்த பெண்ணை மிரட்டி அனுப்பியுள்ளார். அந்த பெண், குழந்தை வரம் கேட்டு சென்ற இடத்தில் குட்டிச்சாத்தானால் தனக்கு நேர்ந்த கொடுமையை போலீசில் புகாராக அளித்தார். அதனை தொடர்ந்து போலீசார் மிர்ச்சி பாபா மீது பலாத்கார வழக்கு பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

அதே போல ராமேஸ்வரம் அடுத்துள்ள மண்டபம் சுற்றுவட்டார பகுதிகளான தோணித்துறை, வலைஏர்வாடி, மரவெட்டிவலசை மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றிவந்த ஜான் ராபர்ட் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை பூர்வீகமாக கொண்ட 46 வயதான பாதிரியார் ஜான் ராபர்ட், தேவாலயங்களுக்கு வந்து செல்லும் மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக , குழந்தைகள் நல அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது

விசாரணையில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து , குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு பாதிரியார் ஜான் ராபர்டை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு இந்த இருவரின் கைது சம்பவங்களே சாட்சி..!


Advertisement
மது போதையில் மகளை சித்திரவதை செய்த மருமகனை சுத்தியலால் அடித்து கொலை செய்த மாமனார் கைது.!
சான்ட்விட்ச் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவுக்கு ஆளான 3 சிறுவர்கள்.. நலம் விசாரித்த அமைச்சர் காந்தி..!
நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கச் சென்ற போது ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு கடலில் மூழ்கிய விபரீதம்.!
நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு.. பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது.!
தனியார் தோல் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து.. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.!
பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் கண்டெடுப்பு
கம்மல், கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனை பள்ளிக்குள் அனுமதிக்காததால் பெற்றோர் வாக்குவாதம்

Advertisement
Posted Sep 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்


Advertisement