திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஜெஜெ நகர் பகுதியில் வசித்து வந்த திமுக உறுப்பினர் மோகன், நேற்றிரவு அவரது வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி சட்டம் ஒழுங்கு போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.