செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

காமன்வெல்த் தொடர் நிறைவு.. பதக்கங்களைக் குவித்த இந்தியா..!

Aug 09, 2022 09:14:06 AM

 

கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள், வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்புடன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டி நிறைவடைந்தது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ந் தேதி தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி, அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் வண்ணயமான நிறைவுவிழா நடைபெற்றது.

1950களில் பர்மிங்காம் குழந்தைகள் விளையாடியது, தொழிற்புரட்சிக்குப் பின் தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கொண்டாடியது போன்றவற்றைக் குறிக்கும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அப்பாச்சி இண்டியன், பஞ்சாபி இசைக்குழு, புகழ்பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் ஆகிய கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் அணிவகுத்து வந்தனர்.இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர். போட்டியின் நிறைவாக வாணவேடிக்கைகளைக் கண்டு மைதானத்தில் இருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கொடி இறக்கப்பட்டு, அடுத்த போட்டி நடைபெறும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காமன்வெல்த் தொடரில் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும், கனடா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.


 


Advertisement
டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
டி-20 உலகக்கோப்பையிலிருந்து பும்ரா விலகல்
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டி-20 போட்டி: இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்தியா- தென்ஆப்பிரிக்கா 20ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது..!
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண தடுப்பு வேலிகளை உடைத்து சென்ற ரசிகர்கள்..!
மும்பை இந்தியன்ஸ் அணி புதிய பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதியில் சாமி தரிசனம்
லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவிப்பு
முன்னாள் கிரிக்கெட் நடுவர் அசாத் ராப் மரடைப்பால் காலமானார்..!

Advertisement
Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

மகிஷாசுர சம்ஹாரத்தை காண குலசையில் குவியும் பக்தர்கள்..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,Big Stories,

குழந்தை திருமண விவகாரம் : சிதம்பரம் தீட்சிதருக்கு வலைவீச்சு..!

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,ஆன்மீகம்,

தமிழகம் முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம்..!

Posted Oct 04, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஸ்கூல் பாப்பா ஷூக்கு உள்ளே ‘பப்பு’ ஸ்னேக் ..! ஒளிஞ்சி விடையாடற இடமாடா இது ?

Posted Oct 05, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,ஆன்மீகம்,

பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்


Advertisement