சென்னை மடிப்பாக்கம் அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மீது முத்தமிட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளகரத்தில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள் அதிகாலை 3 மணியளவில் சில மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். குடியிருப்புவாசிகள் சிலர் சத்தமிட்டதும் அவர்கள் தப்பியோடியனர்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது குடியிருப்பின் பக்கவாட்டுச் சுவர் மீது நடந்துச்சென்று, சிசிடிவி கேமரவிற்கு முத்தமிட்டு சென்றது தெரியவந்தது.
போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் அந்த நபர்கள் கொள்ளையர்களா? என்ற கோணத்தில், மடிப்பாக்கம் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.