தேனி அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையை தடுக்க சென்ற நபரை அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பூதிப்புரத்தில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் நேற்று மதுபோதையில் வந்து குப்பை கொட்டும் பிரச்னையில், ஊர்க்காவலன் என்பவரின் சமூகத்தை பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்ட ஊர்காவலனின் உறவினர் மகேஸ்வரகுமார் தனிப்பட்ட பிரச்சனைக்காக எதற்கு தனது சமூகத்தை இழிவாக பேசுகிறாய் என கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், அவர் மீது கல்லை தூக்கி எரிந்ததோடு, தடுக்க வந்த இருவரையும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மூவரில் மகேஸ்வரகுமார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார், ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.