செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்

Aug 08, 2022 08:21:09 AM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாத்திரக்கடை வியாபாரியை கடத்தி 5 லட்சம் ரூபாய் பறித்த பெங்களுர் கும்பலை சினிமாவை மிஞ்சும் வகையில் துரத்தி போலீசார் வளைத்து பிடித்து பணத்தை மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம். இவர் இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்க பாலம் அருகே பாத்திரக்கடை நடத்தி வருகிறார். மேலும் பழைய இரும்பு பொருள்களையும் வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று மதியம் தங்கம் கடையில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது டிப் டாப் ஆடை அணிந்த வந்த சிலர் தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்,

கையில் வாக்கி டாக்கி ஒன்றும் கையில் வைத்திருந்த அவர்கள் திருட்டு பொருளை வாங்கியது தொடர்பாக உள்ள ஒரு வழக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்ல வந்ததாக அவர்கள் குறியுள்ளனர். ஆனால் வியாபரி தங்கம் தான் எவ்வித பொருளும் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இருந்த போதிலும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு இனவோ காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

கார் கோவில்பட்டியை தாண்டி விருதுநகர் அருகே சென்றதும் 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவோம், இல்லை என்றால் கைது செய்து அடைத்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். பணம் கொடுக்க தங்கம் மறுத்துள்ளார்.

இதையடுத்து 15 லட்சம், 10 லட்சம் என பேரம் பேசி கடையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் விடுகிறோம் என்றதும் வியாபாரி தங்கம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையெடுத்து கரூர் வரை சென்ற கார் மீண்டும் திரும்பி விருதுநகருக்கு வந்துள்ளார்.

தங்கம் தனது மகன் செந்திலுக்கு தகவல் தெரிவித்து 5 லட்ச ரூபாயை கொண்டு வர சொல்லியுள்ளார். செந்திலும் பணத்தினை விருதுநகருக்கு கொண்டு வந்துள்ளார். 2 மணி நேரத்திற்க மேலாக பல இடங்களுக்கு வர சொல்லி அலைக்கழிப்பு செய்த அந்த கும்பல் இறுதியில் ஒரு தனியார் பள்ளி முன்பு பணத்தினை பெற்றுக்கொண்டு தங்கத்தினை அந்த கும்பல் விடுவித்துள்ளது.

அங்கிருந்து வந்த தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் வைத்து , கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சிசிடிவி காட்சியில் உள்ள காரின் அடையாளத்தினை வைத்து சாத்தூர் சுங்கசாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த கார் அதனை கடந்து சென்றது தெரியவந்துள்ளது.

இருப்பினும் காரில் இருந்த நம்பரும், சுங்கசாவடியில் பாஸ்டேக் மூலம் பணம் எடுக்கப்பட்ட நம்பரும் வெவ்வேறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் போலி நம்பர் பிளேட் வைத்து வந்தது தெரியவந்தது. இதையெடுத்து பாஸ்டேக்கில் உள்ள வாகன எண்ணை வைத்து போலீசார் அந்த காரை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

மேலும் அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். அந்த கார் கரூர் அரவாக்குறிச்சி வேளஞ்செட்டியூரில் சுங்கசாவடி பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சுங்கசாவடி அருகே வரும் போது போலீசார் தடுக்க முயன்ற போது அந்த கார் தடுப்புகள் மீது மோதி விட்டு நிற்கமால் சென்றுள்ளது.

போலீசாரும் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.. வெள்ளியணை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஆட்டையாம்பரப்பு பகுதியில் போலீசார் செயற்கையாக டிராபிக் ஜாம் ஏற்படுத்தி அந்த காரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

காரில் இருந்த கார் டிரைவர் பெங்களுரைச் சேர்ந்த் பரன்கவுடா, தாஸ் ,டேனியல் , பவுல், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 லட்ச ரூபாய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலி வாக்கி டாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த போலி போலீஸ் கும்பலில் டேனியல் என்பவர் டி.எஸ்.பியாக நடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. வியாபாரி தங்கம் திருட்டு பொருட்களை வாங்கி மதுரையை சேர்ந்த மொத்த வியாபாரி ராஜபாண்டியிடம் விற்றுள்ளார்.

திருட்டு பொருட்கள் மூலம் தங்கத்திடம் ஏராளமாக பணம் இருப்பது ராஜபாண்டிக்கு தெரியவந்துள்ளது. அவரது ஏற்பாட்டின் பேரில் பெங்களூரில் இருந்து கூலிப்படை ஒன்று போலீஸ் போல சென்று வியாபாரி தங்கத்தை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது.


Advertisement
நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!
பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?
பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!
சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!
கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்
வீட்டுக்குள் புகுந்த நாகம் நாகினியான வீட்டுக்காரம்மா..! அருள்வாக்கு அட்ராசிட்டி..!
காதலுக்கு பிரேக் அப் கல்லூரி மாணவியை அடித்துக் கொன்ற இளைஞர்..! பதிவு திருமணம் செய்ய வராததால் ஆத்திரம்..!
நினைவெல்லாம் நித்யா.. கந்து வட்டி காதலுக்கு கணவன் கொடுத்த பரிசு..!
கள்ளக்காதலியுடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற கள்ளக்காதலன்.. மகன்களால் சிக்கிய பெண்.!
பொண்ணு தன் ஜாடை இல்லைன்னு டெயிலர் செய்த விபரீதம்..! வாளியில் அடைத்து பரணில் வைத்த கொடூரம்.!

Advertisement
Posted Sep 27, 2022 in தமிழ்நாடு,Big Stories,

நிரம்பித் ததும்பும் சோலையாறு அணை.. வால்பாறை ட்ரிப் போறீங்களா..? இதை கவனிக்க மறக்காதீங்க.. சாலையை மூடும் மேகங்கள்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பேரம் பேசியதை அம்பலப்படுத்திய யூடியூப்பர் மீது புகார் ..! ஸ்ரீமதியின் தாய் சொல்வது உண்மையா..?

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

பெட்ரோல் குண்டு வீச்சு.. அடிச்சி மிதிச்சி விசாரிக்கிறாங்க.. இளைஞரை கதற விட்ட போலீஸ்..!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாண்ட்விச் சாப்பிட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. ராணிப்பேட்டை ரஷீத் கேண்டீனுக்கு சீல்.. உப்பு பிஸ்கட்டுக்கு பேமஸுன்னு புரூடா.!

Posted Sep 26, 2022 in தமிழ்நாடு,Big Stories,

கமிஷன நோட்டா தருவீங்களா..? இல்லை செக்கா தருவீங்களா ..? நிறைய செலவு பண்ணிருக்கோம்..! பேரம் பேசிய திமுக பிரமுகருக்கு நோட்டீஸ்


Advertisement