செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரீல்ஸ்-சுக்காக அருவி பாறையில் அலப்பறை.. தவறி விழுந்த தம்பி ..! வெளியானது அதிர்ச்சி வீடியோ ..!

Aug 04, 2022 07:47:14 AM

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அடுத்த புல்லாவெளி அருவியில் ரீல்ஸ்சுக்காக பாறையில் இறங்கி வீடியோவுக்கு போஸ் கொடுத்த இளைஞர் கால் வழுக்கி அருவிக்குள் விழுந்த காட்சி வெளியாகி உள்ளது. விபரீத வீடியோ ஆசையால் ஆர்ப்பரிக்கும் அருவியில் சிக்கி மாயமான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று நண்பருடன் அருகில் உள்ள புல்லாவெளி அருவிபகுதிக்கு சென்றுள்ளார்.

கடந்த சில தினங்களாக தொடரும் மழை காரணமாக புல்லாவெளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. தனது தைரியத்தை ரீல்ஸ் மூலமாக பிரபலப்படுத்த நினைத்த அஜய்பாண்டியன், அந்த அருவியின் முன்பாக நின்று வீடியோ எடுத்து ரீல்ஸ் செய்ய திட்டமிட்டார். அதன்படி பாறையில் இறங்கி கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நண்பர் அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார்

அத்தோடு மேலே ஏறி இருக்கலாம் அதை விடுத்து ஈரமான பாறையில் அடுத்த அடி எடுத்து வைத்த அஜய்பாண்டியன் கால் பாறையில் வழுக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிக்குள் தவறி விழுந்தார். வீடியோ எடுத்த நண்பர் பதற்றத்தில் அலறித் துடித்தார்.

வழுக்கி விழுந்த அஜய்பாண்டியன் நிலை என்னவானது என்பது தெரியாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு தேடி வருகின்றனர்.

கடல் மட்டத்தில் இருந்து பல நூறு அடிகள் உயரம் கொண்ட அந்த அருவி பாதை கரடு முரடான பாறைகளை கொண்டது என்று கூறப்படுகின்றது. பாய்ந்தோடும் இந்த அருவி தண்ணீர் திண்டுக்கல் காமராஜர் நீர்த்தேக்கத்தை சென்றடைகின்றது. ((spl gfx out))செல்ஃபி மாற்றும் வீடியோ ரீல்ஸ் மோகம் சிலருக்கு ரிலாக்ஸ்சாக இருக்கலாம், ஆனால் இது போன்ற இடங்களில் நின்று வீடியோ எடுக்கும் விபரீத முயற்சிகள் உயிருக்கு ரிஸ்க் ஆகி விடும் என்பதற்கு இந்தச்சம்பவமே சாட்சி..!


Advertisement
ரவீந்திரநாத் நிலத்தில் சிறுத்தை இறந்து கிடந்த விவகாரம் : சிறுத்தையை அடித்துக் கொன்றதாக ரவீந்திரநாத் மேலாளர்கள் இருவர் கைது..!
கேன்சர் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக பயன்படுத்திய வாலிபர் பலி..!
விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்து டிரைவரை மீட்கச் சென்ற நபர்கள் மீது லாரி மோதி விபத்து.. 2 லாரி ஓட்டுநர்கள் உடல்நசுங்கி பலி
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரி..?
அரசு மகப்பேறு மருத்துமனை வளாகத்தில் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதால் பரபரப்பு.!
டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பண மோசடி... தன்னை காப்பாற்றுமாறு பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்து கோர விபத்து: 27 பேர் உயிரிழப்பு.. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஐ.ஏ.எஸ்.அதிகாரி மனைவியை ஆபாசமாக திட்டிய கே.எஸ்.அழகிரியின் பேரன், பேத்தி - வீடியோ வைரல்!
கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்
பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Advertisement
Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கட்சி பவர குமார் எங்களிடம் காண்பித்து விட்டார்..! உயிரை துறந்த பெண்ணின் கண்ணீர்

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பதுங்கி ... படுத்து.. கம்பியால் நெம்பிய ஜேம்சு பாண்டூஸ்..! சிரிப்பு திருடர்களின் சிசிடிவி காட்சி

Posted Oct 02, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இலவசம்... இலவசம்ன்னு.. எல்லா விலைவாசியும் ஏறிடுச்சி ஓசி பயணம் வேணாம் காச புடி..! கொதித்து எழுந்த பெண்கள்

Posted Oct 01, 2022 in சினிமா,வீடியோ,Big Stories,

முதல் நாளில் ரூ.80 கோடிகள்.. இது சோழர்களின் வெற்றி..! லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Posted Oct 01, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

போலீசில் போர்ஜரி பைக்.. பவரை காட்டாமல் ஓட்டம் எடுத்த TTF வாசன்..!


Advertisement