திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கலைப்புலி தாணு ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதல் வருமானவைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புச்செழியனின் வீடு, கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், மதுரையில் உள்ள பூர்வீக வீடு என அவர் தொடர்புடைய ஏராளமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
நுங்கம்பாக்கத்தில் அவரது தம்பி அழகர்சாமி வசித்து வரும் வீடு பூட்டி இருந்ததால் அங்கிருந்த ஊழியர்களிடம் அதிகாரிகள் சாவியை கேட்ட போது, அழகர்சாமி அல்லது அவரது குடும்பத்தினரின் கண்களை ஸ்கேன் செய்தால் மட்டும் தான் சென்சார் கதவுகள் திறக்கும் என கூறியுள்ளனர்.
மதுரையில் இருந்து அவரது மகள், நேற்றிரவு வீட்டை திறந்த பிறகு அதிகாரிகள் அங்கும் சோதனை நடத்தி வருகின்றனர்.