நடிகர் மாதவன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படம் வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் மாதவன் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். விஞ்ஞானி நம்பி நாராயணனும் அப்போது உடன் இருந்தார்.
தனது துறையில் பல சாதனைகளைப் புரிந்த லெஜெண்டின் முன்னிலையில் ஆசீர்வாதங்களைப் பெறும் போது இது நிச்சயமாக வாழ்வில் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என டிவிட்டரில் மாதவன் பதிவிட்டுள்ளார்.