செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவை தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு

Jul 03, 2022 12:29:22 PM

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 164 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கியது. முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களும், அவரை ஆதரிக்கும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கியிருந்த டிரைடென்ட் விடுதியில் இருந்து நேராகச் சட்டப்பேரவைக்கு வந்தனர். அனைவரும் ஒரேபோல் காவித் தலைப்பாகை அணிந்து வந்தனர்.

 

துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வந்தனர். சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஆதித்ய தாக்கரேயும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார். பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜகவின் ராகுல் நர்வேகர், சிவசேனாவின் ராஜன் சால்வி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளுடன் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு எதிராக 107 வாக்குகள் பதிவாகின. சமாஜ்வாதி, மஜ்லிஸ் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டனர்.

சபாநாயகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகளுடன் வெற்றிபெற்றுள்ளதால் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிப்பிலும் ஏக்நாத் சிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Advertisement
தரமற்ற உணவு வழங்கியதால் கேட்டரிங் சர்வீஸ் மேலாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்எல்ஏ
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தற்காலிக தடை விதித்துள்ள FIFA..!
கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் இருதரப்பினரிடயே மோதல் - 144 தடை உத்தரவு அமல்!
தேசிய கொடியுடன் 5 கோடி 'செல்பி' புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு!
ராஜஸ்தானில் 4.24லட்சம் கால்நடைகள் தோல் கட்டி நோயால் பாதிப்பு.... முதலமைச்சர் அசோக் கெலாட் தகவல்
சுதந்திர தின விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்.. ஒருவருக்கு கத்திக்குத்து - சிவமொகா நகரில் 144 தடை உத்தரவு
வீறுநடை போட்டு மீசையை முறுக்கி பாகிஸ்தான் வீரர்களை பார்த்து கர்ஜித்த இந்திய வீரர்கள்.. எல்லையில் மாஸ்..!
மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவிகிதம் அதிகரித்து ரூ.5 லட்சம் கோடியாக உயர்வு
38 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு..!
டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் டிஜி யாத்ரா செயலி மூலம் பயணிகளுக்கு புதிய சேவை!

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement