செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Jul 03, 2022 10:30:28 AM

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் விவாகரத்து ஆன தனது மகனுக்கு மறுமணம் செய்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில், திருமணத் தரகர் மூலம் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான சில நாட்களிலேயே இந்திராணி மகனிடம் மாத வருமானம், வீட்டின் பீரோ சாவி ஆகியவற்றை தன்னிடம்தான் கொடுக்க வேண்டும் என சொல்லி சரண்யா சண்டையிட்டு உள்ளார். கணவன் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுமெனவும் அவர் அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு சரண்யா தனது மாமியார் இந்திராணியை வீட்டை விட்டு துரத்தியதால் மனமுடைந்த கணவன், சொத்துக்களை மாற்றித்தர முடிவு செய்து சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். சரண்யா ஆவணங்களைக் கொடுத்த போது அதில் C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது.

இதில் சந்தேகம் அடைந்த இந்திராணி மற்றும் அவரது மகன் அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டையில் பதுங்கியிருந்த சரண்யாவை ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த சுகுணாவுக்கு ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு மகள்களும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வந்த சுகுணா வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால், திருமண புரோக்கர்கள் உதவியுடன் சரண்யா, சந்தியா என பெயரை மாற்றி, திருமண ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்திராணி மகனை திருமணம் செய்ய வயதைக் குறைத்துக் காட்டுவதற்காக பியூட்டிபார்லருக்கு சென்று முடியைத் திருத்தி அழகுபடுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோன்று, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே உணவு காண்டராக்டரான சுப்ரமணியன் என்பவரை ஏமாற்றி சந்தியா என்ற பெயரில் திருமணம் செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுகுணா, சந்தியா,சரண்யா என பல பெயர்களை பயன்படுத்தி பலரை திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் யார்யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
1,000 மீட்டர் நீளம், 15 அடி அகல தேசிய கொடியுடன் காங்கிரசார் ஊர்வலம்
கீழே விழுந்த மொபைல் போனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததால் ஆத்திரம்.. போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது!
டெஸ்ட் டிரைவ் என 8 லட்சம் ரூபாய் ஜீப்புடன் எஸ்கேப்பான போலி வக்கீல்..! வடிவேலு காமெடி பாணி சம்பவம்
அம்பத்தூர் எஸ்டேட்டில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் போலி பணியாளர்களை உருவாக்கி ரூ.6 கோடி மோசடி
நீதிமன்றத்தில் ஆஜராக சென்றவர்களை கொலை செய்ய ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த 3 பேர் கைது
முழுமையாக இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும் பெண்களுக்கான இலவச பேருந்துகள்..!
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
நண்பன் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ஓராண்டு காத்திருந்து இளைஞரை கொன்ற 5 பேர் கைது
மாநகராட்சிக்கு வாடகை, வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'.. சென்னை மேயர் பிரியா கடும் எச்சரிக்கை
ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லிய மாநகராட்சி ஊழியர் மீது தாக்குதல்.. களஞ்சியம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது..!

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement