குஜராத் மாநிலம் தங் என்ற கிராமத்தில் நிலவும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கங்காபாய் என்ற விவசாயி தனி ஆளாக பாடுபட்டு கிணறு ஒன்றை தோண்டியுள்ளார்.
கிணறு தோண்டுவதற்காக அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதால் அவர் ஒற்றை ஆளாக முயன்று இந்த கிணற்றை தனது சொந்த நிலத்தில் தோண்டியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனியாக பாடுபட்டு இந்த 32 அடி ஆழ கிணற்றை தோண்டியதாக அவர் கூறுகிறார்.