செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

Jul 01, 2022 10:38:26 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து சந்தோஷ்குமாரை காணாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடிய பிறகு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் ஆற்றில் ஆண் சடலமொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது அது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு மாதமாக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்ற வசந்தகுமாரியின் ஆண் நண்பர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் இவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டு அதில் சந்தோஷ்குமாரை வசந்தகுமாரியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வசந்தகுமாரி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
"ரூட் தல" பிரச்னையில் இரு கல்லூரி மாணவர்களிடையே மோதல்...10 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு..!
1 முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!
சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்
கோவில் திருவிழாவின் போது கர்ணம் அடித்த கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கண்டெய்னர் லாரியில் தேசியக் கொடி அச்சிட்டு 108 வகையான சீர்வரிசை வழங்கல்!
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக மேலும் 3 பெண்களை கைது செய்துள்ள போலீசார்.!
குடிபோதையில் நண்பரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த நபர் கைது.!
தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!
வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement