செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
அரசியல்

மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி..!

Jun 30, 2022 09:15:31 PM

காராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

வருகிற சனிக்கிழமை அன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முதலமைச்சர் ஏக்நாத் சிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 39 பேரும் அறிவித்தனர். பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார்.

இந்நிலையில், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இதையடுத்து ஆட்சியமைக்கும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்ட ஆளுநர், இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்நாவிஸ், கூட்டணி அரசில் தான் அமைச்சராக இடம்பெறப் போவதில்லை என்றார். ஆனால் பாஜக தேசியத் தலைவர் நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அமைச்சரவையில் பட்னாவிஸ் இடம் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.

இதனை ஏற்று ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவியேற்க பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார்.

இரவு 7.30 மணி அளவில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றுக் கொண்டனர்.

இருவருக்கும் ஆளுநர் பகத்ஷிங் கோஷியாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சிவசேனா - பாஜக உறுப்பினர்களைக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


Advertisement
நிதி ஆயோக் கூட்டததைப் புறக்கணித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ; உயர்மட்டக் கூட்டத்திற்கு தமது கட்சியின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு
இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு மூடுவிழா நடத்த தமிழக அரசு திட்டம் - அண்ணாமலை குற்றச்சாட்டு
சஞ்சய் ராவத்தை மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
முதலில் வருவோருக்கே முன்னுரிமை எனக்கூறி ஆ.ராசா 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டார் - அண்ணாமலை குற்றச்சாட்டு
எனக்கு வாய்க்கொழுப்பு என்றால், ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு - சீமான் ஆவேசம்
கடற்கரையில் நினைவிடங்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்
எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ அறிவிப்பு..!
தி.மு.க.வுடன் எந்த காலத்திலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை - அண்ணாமலை
அ.தி.மு.க. என்றால் தாங்கள் தான் - ஜெயக்குமார்.. RTI தகவல் படி ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் தான் - கோவை செல்வராஜ்
"சஞ்சய் ராவத் நிரபராதி என்றால் விசாரணைக்கு பயப்பட வேண்டாம்"... ஏக்நாத் ஷிண்டே பேச்சு

Advertisement
Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஓங்கி அறைந்த மாணவி..! பலாத்காரம் செய்து கிணற்றில் வீசிக்கொலை..! துப்பு துலக்கியது போலீஸ்..!

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பாழடைந்த வீட்டில் கல்வீசும்'சந்திரமுகி' திகிலில் கடலூர்..! துப்பறிந்த போலீஸ் எச்சரிக்கை

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கிராவல் என்ற பெயரில் தாதுக்கள் நிறைந்த தேரி செம்மண் கொள்ளை. ! அதிகாரிகள் துணையுடன் கடத்தல்

Posted Aug 08, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கூலிக்கு ஆள் வைத்து வியாபாரிகளை கடத்தும் சூது கவ்வும் கும்பல்..! ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்


Advertisement