செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்சுக்கு வேண்டுகோள்.!

Jun 27, 2022 04:23:54 PM

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சென்னையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனைக்ஹ்க்ஜ் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருமணி நேர ஆலோசனைக்குப் பின் சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு எடப்படி பழனிசாமி புறப்பட்டார். 

அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வம் படத்தைத் அதிமுக நிர்வாகி ஒருவர் வட்டமாகக் கிழித்தார்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 65 தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி முடிந்துவிட்ட நிலையில், கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் எனக் குற்றஞ்சாட்டினார்.


Advertisement
மதுரை சரவணன் பாஜகவிலிருந்து நீக்கம்
செருப்பு வீச்சால் தூக்கம் வரலைங்க... டாக்டர் சரவணன் திடீர் முடிவு...! அண்ணன் வந்தான் தாய் வீடு
கோவாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக அமோக வெற்றி
போதைப்பொருட்களை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்
"குடியரசுத் துணைத்தலைவராக வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை"-நிதிஷ்குமார்
குடியரசுத் துணைத் தலைவர் பதவி தர மறுத்ததால்தான் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினார்-சுஷில் மோடி
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் ஒருபோதும் அதிமுக-வில் இணைய முடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Advertisement
Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

சின்னதம்பி காலத்து டெக்னிக்கை கையில் எடுத்த விருமன் ரசிகர்கள்..! கூட்டம் சேர்க்க இப்படி ஒரு பிளான்

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தலையில் கிரீடம் கையில் சூலம் ‘அம்மன்’ ரம்யாகிருஷ்ணனுக்கு டஃப் கொடுக்கும் அன்னபூரணி..!

Posted Aug 16, 2022 in தமிழ்நாடு,Big Stories,

வலிமை வில்லனால் வங்கிக் கொள்ளை.. 14 கிலோ தங்கம் எங்கே ..?

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

தன் கிராம மக்களுக்காக ரூ.13 கோடியை அள்ளிவைத்த நிஜ சூப்பர் ஸ்டார்..! சும்மா அதிருதில்ல..!

Posted Aug 15, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ரூ.20 கோடி நகை கொள்ளை.. கைது நடவடிக்கை தீவிரம்.. பாதிக்கும் மேல் நகைகள் மீட்பு?


Advertisement