செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

எப்படி இருந்த என்னை.. இப்படி ஆக்கிட்டாங்க..! பந்து போல வீங்கிய முகத்துடன் நடிகை சுவாதி அவதி..!

Jun 18, 2022 07:42:47 PM

பல்வலிக்கு சிகிச்சைக்கு சென்ற இளம் நடிகை ஒருவருக்கு அதிக அளவு மயக்க மருத்து செலுத்தப்பட்டதால் முகம் பந்து போல வீங்கி பரிதாபமாக அவதிப்பட்டு வருகின்றார். மருத்துவரின் போலியான வாக்குறுதியால் 20 நாட்களாக தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பெங்களூரு ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி. இவர் தனியார் டிவி சேனல் ஒன்றில் வர்ணனையாளராக பணிபுரிந்துவந்தாலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

 சுவாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பந்து போல வீங்கி அஷ்டகோணலான முகத்துடன் காணப்படும் தனது புகைப்படங்களை தற்போது தன்னுடைய நிலை என்று பகிர்ந்துள்ளார். அதற்கு யார் காரணம் என்பதையும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு ஒன்றிற்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் , மயக்க மருந்துக்கு பதிலாக வேறு ஒரு ஊசியை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

அதன்பேரில் அந்த ஊசியை செலுத்த சுவாதி அனுமதித்துள்ளார். இதன்பின்னர் சுவாதியின் முகம் ஒருபக்கமாக நன்றாக வீங்கிபோய் அவரது முகத்தின் அமைப்பு மாற தொடங்கி உள்ளது. இதனால் 2 மணி நேரத்தில் சரியாகி விடும் என்ற மருத்துவர் மறு நாள் சரியாகி விடும் என்றும் அது 2 நாள்... 4 நாள்... 6 நாட்கள் என்று கடந்து தற்போது 20 நாட்கள் கடந்தும் முகத்தில் வீக்கம் குறையாததால் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார் சுவாதி

தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறினாலும் தற்போது வரை தனது முகவீக்கம் சரியாகவில்லை என்பதால் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்வது இல்லை என்றும் சுவாதி குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் தான் இனி பெங்களூரு மருத்துவர்களை நம்பபோவதில்லை என்றும் மும்பை சென்று சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும், மருத்துவரின் தவறான சிகிச்சையால் முகமே முதலீடான தனது மீடியா வேலையையும் தான் பறி கொடுத்துள்ளதாக பரிதாபத்துடன் குறிப்பிட்டுள்ளார் நடிகை சுவாதி.

நடிகைகளுக்கு முகவெட்டு தான் திரைப்பட வாய்ப்புகளை பெற்றுத்தரும், சுவாதியின் முகமே ஒரு பக்கம் வெட்டுபட்டது போல இருப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையும் கேள்வி குறியாகி உள்ளது.

 


Advertisement
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - சினிமா துணை நடிகர் கைது..!
குடும்பத்தினருடன் தேசிய கொடியேற்றினார் நடிகர் ஷாருக் கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தரிசனம்
குற்றாலம் சாரல் திருவிழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்பு
டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான "டாப்கன் மேவ்ரி" உலகளவில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை.!
விருமன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் சூரி மீது தண்ணீர் கேன் வீச்சு..! மன்னிப்புக்கேட்டார் ஷங்கர் மகள்
அன்புச்செழியன், தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத வருவாய் 200 கோடி ரூபாய் கண்டுபிடிப்பு
மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு
'கடலுக்கு அடியில் AK' நடிகர் அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் ரசிகர்கள்
பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement