பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் கொண்டுவர அனுமதி கிடையாது என்றும், வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் மூலம் கல்விகற்ற மாணவர்களின் மன இறுக்கத்தை போக்க 5 நாட்கள் உளவியல் வகுப்புகள் தன்னார்வ அமைப்பினர் மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக 9494 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.