பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மோடியிடம் கேட்டுக் கொண்டார்.