முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 25 விழுக்காடு வளர்ச்சியடைந்து 2498 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
2021 - 2022 நிதியாண்டில் 46 கோடியே 29 இலட்ச ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 45 விழுக்காடு அதிகமாகும். நிறுவனம் வழங்கிய கடன்களில் வாராக்கடன்களின் விகிதம் அரை விழுக்காடாகும்.
முத்தூட்டு மினி பைனான்சியர்ஸ் நிறுவனம் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 826 கிளைகளுடன் மூவாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.