செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

போக்சோ வழக்கில் உள்ளே போயும் புத்திவராத ஜென்மம்..! சிறுவனை சித்ரவதை செய்து சிக்கினார்..!

May 27, 2022 07:42:30 AM

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிந்த சிறுவனை தாயும் அவரது காதலனும் சேர்ந்து சித்திரவதை செய்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் அந்த சிறுவனை மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் வீட்டு வேலை பார்த்து வரும் நிலையில், ஆட்டோ ஓட்டி வந்த இவரது மகன் மாரிமுத்து, முகிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

17 வயது சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்த விவகாரத்தில் சிக்கிய மாரிமுத்து, உடந்தையாக இருந்ததாக மனைவி முகிலா ஆகியோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

3 மாதம் சிறையில் இருந்த முகிலாவை அவரது மாமியார் நிபந்தனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். மாரிமுத்துவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த முகிலா காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச்சென்ற போது, மற்றொரு போக்சோ வழக்கில் காவல் நிலையத்துக்கு கையெழுத்துப் போட வந்த சுயம்பு லிங்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவன் ஜெயிலில் இருக்கும் நிலையில் இரண்டு ஜாமீன் பறவைகளும் காதல் பறவைகளாகி உள்ளது. முகிலாவுக்கு தேவையான உதவிகளை செய்து வந்த சுயம்புலிங்கம் சிறுவனை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனது 2 அரைவயது மகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை பார்த்துக் கொள்வது போல தங்கி இருந்த முகிலாவும் சுயம்புலிங்கமும் அடிக்கடி மருத்துவமனையில் ஒதுக்கு புறமாக சந்தித்து தனியாக வெகுநேரம் பேசி வந்ததாகவும், அப்போது குழந்தை அழுததால் சுயம்புலிங்கம் குழந்தையை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்படுகின்றது இதனை நேரில் பார்த்தவர்கள் குழந்தைகளை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்

இதற்க்கிடையே அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவரை பார்ப்பதற்கு வந்த குழந்தையின் பாட்டி கிருஷ்ணம்மாள், தனது மகன் மாரிமுத்துவின் குழந்தை கால் ஒடிந்த நிலையில் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்த போது பெற்ற தாயும் அவளது காதலனும் சேர்ந்து சிறுவனுக்கு செய்த கொடுமையை அறிந்து கொத்தித்துப்போனார்

இதையடுத்து முகிலாவிடம் விசாரித்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு பரிந்துறைத்த நிலையில் சிகிச்சையில் இருந்த குழந்தையை பாட்டி கிருஷ்ணம்மாள் எடுத்துக் கொண்டார், தனது உயிருக்கும், பேரன் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டால் முகிலா தான் காரணம் என்றும் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே போக்சோ வழக்கில் சிறைக்கு சென்று வந்த இருவர், தவறை உணர்ந்து திருந்தாமல், தங்களின் வில்லங்க காதலுக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக கருதி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
10 ஆயிரம் கடனுக்கு மீட்டர் வட்டி போட்டு ஒரு கோடி.. போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு பாஜக நிர்வாகி தற்கொலை..!
கீழக்கரை அருகே கடலில் விழுந்து மாயமான மீனவர்களின் உடல்கள் மீட்பு.!
அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து.. தந்தை, மகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!
"சார்.. இப்ப தான் சார் முடி வெட்டினேன்.. என்னை விட்டுருங்க".. புள்ளிங்கோ ஸ்டைலில் சுற்றிய மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த போலீசார்..!
முன்விரோதம் காரணமாக தொழிலதிபரை காரில் கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.!
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. எரித்துக் கொல்ல முயன்ற 16 வயது சிறுவன் கைது..!
தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
ஊராட்சிமன்ற தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது.!
அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை கடத்தல்.. சிசிடிவி பொருத்தப்படாததால் குழந்தையை மீட்பதில் சிரமம்..!
"யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு எடப்பாடியிடம் ராகுல் காந்தி கேட்டாரா..?"

Advertisement
Posted Jul 03, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

விவாகரத்தான ஆண்களிடம் திருமண மோசடியில் ஈடுபட்ட ஆந்திர பியூட்டி ஆன்ட்டி கைது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாப்பிள்ளையை புரட்டி எடுத்த மாமியார்... மகளை தாக்கியதால் ஆத்திரம்..! வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அவள் பெயர் கமலா.. 8 கி.மீ சைக்கிள் மிதித்து தாத்தாவுக்கு சாப்பாடு.. வீடு தேடி வந்து ரூ.1 லட்சம் - விருது

Posted Jul 03, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருக்குது.. மாப்பிள்ளையே வேணாம்.. விபரீத தோழிகளின் வில்லங்க கடிதம்..!

Posted Jul 02, 2022 in தமிழ்நாடு,Big Stories,

ஏன்டா காசு காசுன்னு பிச்சி பிடுங்கறீங்க.. ? லஞ்சத்தில் அரசு ஆஸ்பத்திரி..! நிஜத்தில் இந்தியன் தாத்தா வரனும்.!


Advertisement