செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

நியூ ஸ்கார்பியோவை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியுமாம்..! இது என்ன.. புது புரளியா இருக்கு.!

May 25, 2022 10:04:29 PM

மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாக உள்ள ஸ்கார்பியோ N  காரை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ள கருத்தால் அந்த கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆக் ஷன் ஹீரோவை அறிமுகம் செய்வது போல ஸ்கார்பியோ N காரின் அறிமுக டீசரை எஸ்.யூ.வி ரக கார்களின் தந்தை என்று அதிரி புதிரியாக வெளியிட்டு ஆனந்த் மகிந்திரா டுவிட்டரை தெறிக்கவிட்டார். இந்த டுவிட்டருக்கு, இந்தி படங்களில் பலகார்களை பறக்கவிடும் பிரபல இயக்குநரான ரோஹித் ஷெட்டியின் ரசிகர் ஒருவர், அடுத்ததாக இந்த காரை பறக்க விட வேண்டியது தான் என்று தமாஷாக டுவிட்டரில் பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கு இந்தியில் பதில் அளித்த ஆனந்த் மஹிந்திரா, ஸ்கார்பியோ N கார்களை அணுகுண்டால் மட்டுமே தகர்க்க முடியும் அந்த அளவுக்கு உறுதி தன்மையோடு தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட, ஆனந்த் மகிந்திராவின் இந்த கருத்து ஸ்கார்பியோ N கார்களின் மீதான எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

 ஸ்கார்பியோ N கார்கள் மீதான எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, ஏற்கனவே மாஸ்ஸாக அறிமுகமான மகிந்திராவின் xuv 7oo, thar ஆகிய கார்கள் சாலையில் சந்திக்கும் சவால்கள் வாகனபிரியர்களை அதிர வைத்துள்ளது. மிகவும் பாதுகாப்பான ஆப் ரோடு வாகனம் என்று பெருமையுடன் வானத்தில் பறப்பது போல அறிமுகப்படுத்தப்பட்ட thar வாகனம் குரோம்பேட்டை அருகே மரத்தில் மோதிய வேகத்தில் நொறுங்கியது.

அதில் பயணித்த தாய் மகன் சம்பவ இடத்திலேயே பலியாயினர், அதே போல thar வாகனத்தில் சென்று மாடு மீது மோதாமல் தவிர்க்க சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே சல்லி சல்லியான காரில் சிக்கி எம்.எல்.ஏ ஒருவரின் மகன் பலியான சோக சம்பவமும் அரங்கேறியது.

அதே போல வேலூர் அருகே அதிவேகமாக ஓட்டிச்செல்லப்பட்ட xuv 7oo கார் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைக்கு பாய்ந்து சென்று மற்றொரு காரில் மோதிய விபத்தில் அந்த காரின் வந்த மருத்துவர் பலியானது குறிப்பிடதக்கது. பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் வாங்கினாலும் சரி, 2 ஸ்டார் வாங்கினாலும் சரி வாகனங்களை இயக்குவோர் எச்சரிக்கையுடனும் நிதானமாகவும் கார்களை இயக்கத் தவறினால் விபத்துக்கள் தவிர்க்க இயலாதது என்று போக்குவரத்து காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்


Advertisement
கச்சா எண்ணெய் விலை 95 டாலருக்கு கீழ் குறைவு..!
கடந்த நிதியாண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்துள்ள பெரு நிறுவன வரி வசூல்
"பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார்" - ரிசர்வ் வங்கி கவர்னர்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு..!
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது - ரகுராம் ராஜன்
'மகிந்திரா ஸ்கார்ப்பியோ N' வாகனங்கள் முன்பதிவு தொடங்கிய அரைமணி நேரத்தில் ஒரு இலட்சம் வாகனங்கள் முன்பதிவு
"2020-21-ல் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி நேரடி முதலீடு" - மத்திய அரசு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.17,955 கோடி நிகர இலாபம் ஈட்டியுள்ளதாகத் தகவல்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி!
முதல் காலாண்டில் ரூ.9196 கோடி நிகர இலாபம் ஈட்டியது எச்டிஎப்சி வங்கி..!

Advertisement
Posted Aug 18, 2022 in வீடியோ,சென்னை,Big Stories,

கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு...! மாடலுடன் டுகாட்டி காதலன் டூயட்டு..! ஆட்டம் போட்டவனுக்கு போலீஸ் ஆப்பு

Posted Aug 18, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெட்டி இங்கே.. தங்கம் எங்கே..? ஊர் குருவி கள்ள பருந்தானது..! கண்ணாமூச்சி ரே.. கண்டுபிடி யாரே..!

Posted Aug 17, 2022 in சென்னை,Big Stories,

சென்னை நிதிநிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை.. கத்திமுனையில் கைவரிசை..!

Posted Aug 17, 2022 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கஞ்சா குடிக்கி இளசுகள் ஓட்டலில் அட்டகாசம்.. கொலை வெறி தாக்குதல்..! இதற்கு என்ன தான் தீர்வு..?

Posted Aug 16, 2022 in சென்னை,Big Stories,

15 நிமிடங்களில் 32 கிலோ நகைகளை திருடியது எப்படி? முக்கிய கொள்ளையன் பரபரப்பு தகவல்..!


Advertisement